காலை நடைக்குப் பிறகு உடலுக்கு என்ன கொடுக்கிறீர்கள்? — AM Protein Mix
Read this article in English →
கஷ்டமான பகுதியை நீங்கள் ஏற்கனவே செய்து விட்டீர்கள்.
அதிகாலை 5.30 அலாரம். கதவருகே தயாராக இருக்கும் வாக்கிங் ஷூ. சூரியன் உதிப்பதற்கு முன்பே புக் செய்யப்பட்ட பேட்மிண்டன் கோர்ட். ஊர் அமைதியாக இருக்கும்போது பைபாஸ் ரோட்டில் சைக்கிள் சவாரி. ஆபீஸ் போவதற்கு முன் ஜிம்.
ஆனால் காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் பலரும் கேட்காத ஒரு கேள்வி இருக்கிறது — இழந்ததை நீங்கள் எப்படித் திருமபக் கொடுக்கிறீர்கள்?
நடை, ஓட்டம், முப்பது நிமிட பேட்மிண்டன், ஜிம் — எல்லாமே ஒரே விஷயங்களை உடலிலிருந்து எடுத்துக் கொள்கின்றன: சக்தி, நீர்ச்சத்து, மற்றும் தசைகள் தங்களைச் சரிசெய்துக்கொள்ளத் தேவைப்படும் மூலப்பொருள். இதைத் திருமபக் கொடுக்காமல் விட்டால் காலை 11 மணிக்கே தெரிந்துவிடும் — சோர்வு, திடீர் பசி, டீ-பிஸ்கட் பழக்கம். செய்த நல்லதில் பாதி அப்படியே போய்விடும்.
இந்த இடைவெளியை நிரப்பத்தான் AM Protein Mix.
உள்ளே என்ன இருக்கிறது
AM Protein Mix என்பது நட்ஸ் மற்றும் விதைகளின் எளிய, நேர்மையான கலவை — இதற்கு மேல் எதுவும் இல்லை, மறைக்கப்பட்டதும் எதுவும் இல்லை:
- முந்திரி
- பாதாம்
- பிஸ்தா
- வால்நட்
- வேர்க்கடலை
- பூசணி விதை
- சூரியகாந்தி விதை
- மகானா
- ஏலக்காய்
இதுதான் முழு லிஸ்ட். ரிபைன்டு சர்க்கரை இல்லை. மைதா இல்லை. பிரிசர்வேட்டிவ், அடிட்டிவ், கலர், செயற்கை ப்ளேவர் — எதுவும் இல்லை. கவனமாகச் சேகரிக்கப்பட்டு, சுகாதாரமாகப் பதப்படுத்தப்பட்டு, லேப் டெஸ்ட் செய்யப்பட்ட நட்ஸ் மற்றும் விதைகள் மட்டுமே. 2019 முதல் Veetoon-ல் நாங்கள் செய்துவரும் முறை இதுதான்.
இந்தப் பொருட்கள் சேர்ந்து உங்கள் காலைப் பொழுதுக்கு புரதம், நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகளை கொண்டு வருகின்றன — உடற்பயிற்சிக்குப் பிறகு உடல் உண்மையில் கேட்கும் மூன்று விஷயங்கள். பெரும்பாலான “எனர்ஜி” பானங்கள் தரும் வெறும் சர்க்கரை அல்ல.
ஆறு வழிகளில் பயன்படுத்தலாம்
AM Protein Mix உங்களை ஒரு புதிய ரொட்டீனுக்குள் தள்ளாது. உங்கள் ரொட்டீனுக்குள் அது பொருந்தும்.
1. சூடான பாலில்
கிளாசிக் முறை. ஒரு ஸ்பூன் சூடான பாலில் கலந்து, சூடாக இருக்கும்போதே குடியுங்கள். வயிறு நிறையும், மனசும் நிறையும்.
2. குளிர்ந்த பாலில்
ஓடி விட்டு உடல் சூடாகத் திரும்பும் நாட்களுக்கு ஏற்றது. குளிர்ந்த பாலில் கலக்கினால் அது ஒரு ரீப்ரெஷிங் ரிகவரி டிரிங்க்.
3. வெதுவெதுப்பான தண்ணீரில் — Choco Millet சேர்த்து
இது எங்கள் நிறுவனரின் தினசரி தேர்வு, அவர் இதைவிட்டு வெளியே போவதே இல்லை. வெதுவெதுப்பான தண்ணீரில் AM Protein Mix-உடன் Veetoon Choco Millet சேர்த்துக் கலக்குங்கள் — நட்ஸின் வறுத்த ஆழமும், சாக்லேட்-சிறுதானியத்தின் நிறைவும் சேர்ந்து, ருசியில் ட்ரீட் போலவும் வேலையில் முழு காலை உணவு போலவும் இருக்கும். இந்த லிஸ்ட்டில் ஒன்றை மட்டும் முயற்சி செய்வதாக இருந்தால், இதைச் செய்யுங்கள்.
4. சாதாரண வெப்பநிலை தண்ணீரில்
அடுப்பு வேண்டாம், பிரிட்ஜ் வேண்டாம், சிரமம் வேண்டாம். ரூம் டெம்பரேச்சர் தண்ணீரிலும் நன்றாக வேலை செய்யும் — நடையிலிருந்து நேராக வேலைக்குக் கிளம்பும் நாட்களுக்கு உதவும்.
5. ஒரு ஸ்பூன் ஒரிஜினல் தேனுடன்
கலப்படமில்லாத ஒரிஜினல் தேனைக் கலப்பதுதான் இதை இனிப்பாக்க சிறந்த வழி. இயற்கையான இனிப்பு, ரிபைன்டு சர்க்கரை இல்லை — சுவையும் அற்புதமாகப் பொருந்தும்.
6. தேன் கலந்த பேஸ்ட்டாக — குடிக்கவே வேண்டாம்
திரவமே வேண்டாம் என்றால், AM Protein Mix-ஐ தேனுடன் கலந்து கெட்டியான பேஸ்ட் பதத்தில் ஸ்பூனால் சாப்பிடுங்கள். குழந்தைகளுக்கு இந்த முறை ரொம்பப் பிடிக்கும். அவசரமாகக் கிளம்பும் நேரங்களுக்கும் ஏற்றது.
புதிதாகத் திருமணமானவர்களுக்கு ஒரு வார்த்தை
சொந்தமாக ஒரு சமையறையை இப்போதுதான் தொடங்கியிருந்தால், காலை நேரம்தான் நாளின் மிகவும் குழப்பமான பகுதியாக இருக்கும் — புதிய ரொட்டீன், புதிய டைமிங், ஒருவர் விருப்பத்தை இன்னொருவர் கற்றுக்கொள்ளும் காலம்.
அந்த ஷெல்பில் AM Protein Mix இருப்பது நல்லது. ஒரு நிமிடம் கூட ஆகாது, சமைக்கவே வேண்டாம், காலை உணவு சாத்தியமே இல்லாத நாட்களில் இருவருக்கும் வயிறு நிறைந்த, சத்தான ஆரம்பத்தைக் கொடுக்கும். இருவரும் சேர்ந்து உருவாக்கக்கூடிய சின்ன, எளிய பழக்கம் — வருடககணக்கில் நீடிக்கக்கூடிய வகை.
பேக் அளவுகள்
| பேக் | விலை |
|---|---|
| 200 கிராம் | ₹450 |
| 400 கிராம் | ₹860 |
| 800 கிராம் | ₹1,670 |
| 1.2 கிலோ | ₹2,450 |
முதலில் முயற்சி செய்ய 200 கிராம் போதும். பெரும்பாலானவர்கள் இரண்டாவது ஆர்டரிலேயே 400 கிராம் அல்லது வேல்யூ பேக்குக்கு மாறிவிடுகிறார்கள்.
Veetoon வாக்குறுதி
ஒவ்வொரு Veetoon ரெசிபியும் ஒரு பாட்டியின் சமையறையில்தான் தொடங்குகிறது — பாரம்பரிய தமிழ், கிராமத்து ரெசிபிகள், இன்றைய சமையறைக்கு ஏற்ப மீண்டும் உருவாக்கப்பட்டவை. பொருட்களை நாங்களே சேகரிக்கிறோம், சுகாதாரமாகப் பதப்படுத்துகிறோம், லேப் டெஸ்ட் செய்கிறோம், சுவை உண்மையிலேயே நன்றாக வரும் வரை வேலை செய்கிறோம். “ஹெல்தி புட்டுக்கு நல்லா இருக்கு” அல்ல — நல்லா இருக்கு, அவ்வளவுதான்.
Trusted since 2019.
சந்தேகங்களுக்கு WhatsApp: 6374248070 | மின்னஞ்சல்: connect@veetoon.com
Veetoon, No. 68/B2, Erode Main Street, Muthur Post, Tiruppur Dt, Tamil Nadu, India – 638105